Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காவலர்களுக்கு வார விடுமுறை…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழ்நாடு காவல் துறையினருக்கு வார விடுப்பு கட்டாயம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிறந்த நாள், திருமண நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்த கோரிக்கை எழுந்ததை அடுத்து தற்போது  தமிழ்நாடு காவலர்களுக்கு வார விடுப்பு கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

வார ஓய்வு தேவைப்படாத காவலர்கள் பணியில் இருந்தால் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும். உடல் நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிட வாரம் ஒருநாள் விடுப்பு தர வேண்டும். காவலர்களின் பிறந்தநாள், திருமணநாள் கொண்டாட அந்நாளில் விடுப்பு தரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |