வெங்காய விலை தங்கம் போல் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் இன்று கிலோ 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்திற்கான வெங்காய தேவையில் 90 சதவிகிதத்தை கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கலே பூர்த்தி செய்கின்றன. இந்த மாநிலங்களில் இருந்துதான் வெங்காயம் கொண்டு வரப்படுவது வழக்கம். தற்போது அந்த மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காயத்தை கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் நேற்று 70 ரூபாய் வரை விற்பனையான காயம் இன்று கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்