தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மெகா தடுப்பூசி முகாம் இல்லாவிட்டாலும் தடுப்பூசி செலுத்துவோருக்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.