Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கிராமக் கோவில் பூசாரிகளுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கிராமக் கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில், பணிபுரியும் கிராம கோயில் பூசாரிகள் பாதுகாப்புக்காகவும் மற்றும் அவர்களின் நலனுக்காகவும் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நலவாரிய அமைப்பில் உறுப்பினராக இணைவதற்கு விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அந்தந்த மாவட்டத்திற்கான இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இத்துறையில் புதிய உறுப்பினர்களாக 1034 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே 34,661 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் பணிபுரியும் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற திருக்கோயிலாக இருக்க வேண்டும் எனவும் 25 வயது முதல் 60 வயதிற்குள் இருந்தால் மட்டுமே உறுப்பினராக சேர்க்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து திருக்கோவிலில் பூசாரியாக பணிபுரிபவர் தொடர்ந்து 5 வருடங்கள் பணி புரிந்திருக்க வேண்டும் மற்றும் அந்த திருக்கோயில் கட்டி 5 வருடங்கள் ஆகி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கிராமக் கோயில் உறுப்பினர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே சேகர்பாபு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி,

  • பூசாயின் மகன் அல்லது மகளின் திருமணத்திற்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை, பூசாரியின் மனைவி அல்லது மகளின் மகப்பேறு தொடர்பான உதவிகளுக்கு ரூ.6000, உறுப்பினர் மரணமடைந்தால் அவரது இறுதி சடங்கிற்கு ரூ.2000 ஆகும். உறுப்பினர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு ரூ.15000 ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
  • கொரோனா நோய் தொற்று காலத்தில் கிராமக்கோயில் பூசாரி நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1000 கொரோனா நிவாரணநிதி வழங்கப்பட்டது.
  •  மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கு ரூ.500/-, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி கற்பதற்காக ரூ.1000 முதல் ரூ.6000 வரை உதவி தொகை ஆகும்.

Categories

Tech |