Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கிராம சபை கூட்டம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி திட்டம் மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதித்து உறுதிமொழி எடுக்கப்படும். இந்தக் கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த கூட்டம் வழக்கமாக குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் நடைபெறும்.

ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா  பரவல் காரணமாக இந்தக் கூட்டங்கள் நடைபெற வில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக வருகிற 24-ஆம் தேதி மீண்டும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை இயக்குனர் பிரவின் டி நாயார் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார்.

Categories

Tech |