Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடிசை மக்கள் மறு குடியமர்வு கொள்கை…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் குடிசை பகுதி மக்களை பாதுகாப்பதற்காக மறுகுடியமர்வு செய்வதற்கான புதிய கொள்கை அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வருகின்ற 27ஆம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம். நகர்ப்புற மற்றும் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். பொதுமக்கள் http://www.tnscb.org என்ற இணையதளத்தில் வரைவு கொள்கை பற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

அதில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மக்களை மாற்ற வேண்டுமென்றால் அதற்கான திட்டத்தை மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும்.

மக்களே மறு குடிபெயர்வு செய்வதற்கான நிலையான செயல் முறைகளை உருவாக்க இந்த கொள்கையின் பிரதான பணியாக இருக்கும்.

புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் நில உரிமை ஆவணம் இல்லாதவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்.

ஒவ்வொரு பகுதிக்கும் மறுகுடியமர்வு பணிகளுக்கான 7 அம்ச அடங்கிய வரைவு திட்டம் தயாரிக்க வேண்டும்.

மாநில அளவில் வீட்டுவசதித் துறை முதன்மை செயலர் தலைமையில், பல்வேறு துறைகளில் 21 அதிகாரிகள் அடங்கமறு குடிபெயர்வு கமிட்டி ஏற்படுத்த வேண்டும்.

சென்னையில் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் மற்றும் மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் மறு குடியமர்வு கமிட்டி அமைக்கப்படும்.

இந்த கம்யூனிட்டி களின் கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு மறு குடியமர்வு தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்படும்.

 

Categories

Tech |