தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால் ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும். இதில் 30 மீட்டர் நீள கருங்கல் ஜல்லி சாலையாக இருந்தால் ரூ.1,050, தார் ரோட்டிற்கு ரூ.2,250, சிமெண்ட் ரோட்டிற்கு ரூ.2,600 புதிய குழாய் இணைப்பு கொடுப்பதற்காக அரசு செய்யும் பணிகளுக்கான செலவாகும். இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. குடிநீர் இணைப்பு வழங்க அரசு வசூல் செய்யும் சராசரி கட்டணம் இது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Categories