Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்பதலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்காதீங்க….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

திமுக அரசு தேர்தல் அறிக்கையின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குவதாக கூறியிருந்தது. தேர்தல் நேரத்தில் அளித்திருந்த வாக்குகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட் வரும் நிலையில் குடும்பத்தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமானது விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு கூறி இருக்கிறது. இந்த நிலையில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிநிலை சரியான உடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல் ஸ்டாலின் கூறியிருந்தார். தேர்தலுக்கு முன்னதாக கஜானா காலி என்று சொல்லி வாக்கு சேகரித்த போது நிதிநிலை சரியான உடன் தருகிறோம் என்று ஏன் சொல்லவில்லை?

அரசின் வருவாயில் மது விற்பனையின் வருவாய் 116.3% அதிகரித்துள்ளதாக பிடிஆர் பெருமை கொள்கிறார். வருவாயை பெருக்கும் வேறு எந்த திட்டமும் அரசிடம் இல்லாத நிலையில் மது விற்பனை அதிகரிப்பதன் மூலமே நிதிநிலை சரியாகிவிடும் என்பது இதில் தெளிவாகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மதுவால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனால் அதிக இளம் விதவைகள் உள்ளார்கள் என்று சில வருடங்களுக்கு முன்னதாக கனிமொழி கூறியதை நாம் மறந்து விட முடியாது. குடும்பத்தலைவனை இழக்கும் குடும்பத் தலைவிக்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் தேவைதானா? என்பதை முதல்வர் சந்திக்க வேண்டும். எனவே இந்த திட்டத்தை கைவிட்டு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பல குடும்பங்கள் சிறப்பாக வாழும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |