Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000…. அமைச்சர் வெளியிட்ட GOOD NEWS….!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு 1,000 உரிமைத்தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85% நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் இத்திட்டத்தை அறிவிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

Categories

Tech |