Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10,000 நிவாரணம்…. அரசின் முடிவு என்ன?….!!!!

தமிழகத்தில் மழையால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

தொடர் மழை காரணமாக சுமார் 24 மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 50 ஹெக்டர் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 526 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்கள் அழிந்துள்ளன. 12 மாவட்டங்கள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மழை வெள்ள பாதிப்பில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல முடியாமல் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.

இப்படி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் அரசு தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகிறது. வெள்ள நிவாரண நிதி தராமல் காலம் தாழ்த்தி வருவதாக சில சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்துவதற்கு முன்பாக வெள்ள நிவாரண நிதி மக்களுக்கு வழங்கினால் அது உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு சாதகமாக அமையும் என்ற வகையில் திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிகின்றது.

ஆகவே வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் திமுக அரசு சுயநலம் பாராமல் பொதுமக்கள் நலனை கருதி வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 10,000 ரூபாய் வெள்ள நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |