Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு நபரின் மிக முக்கியமான ஆவணங்களுள் ரேஷன் கார்டும் அடங்கும். இது குடியுரிமைக்கான சான்றாக உள்ளது. கூடுதலாக ரேஷன் கார்டு மூலம் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் ஆவணமாகவும் இருக்கிறது. மேலும் மக்கள் குறைந்த விலைக்கு அரிசி, கோதுமை ,சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இதன் மூலம் பெறுகின்றன. இதனால் பலரும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வரும் சூழல் நிலவுகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கிலோவுக்கு 30 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேலும் இந்த சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை பெறுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இத்திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஆணையாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அவரது கோரிக்கையினை ஏற்று ,சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மத்திய அரசானது ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது மூலம், லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதையடுத்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்த அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.மேலும் அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் போதுமான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |