தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோகமாக வெற்றி பெற்றது. இதனிடையில் தேர்தலின் போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும் வீட்டில் உள்ள குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தான் பதவி ஏற்றுக் கொண்டதும் வாக்குறுதியில் தெரிவித்த பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
அதேபோன்று இந்த திட்டமும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. எனினும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு அளித்த தேர்தல் அறிக்கை வாக்குகளை நிறைவேற்றி வருகின்றது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தது போல 2000 ரூபாய் முதல் தவணையாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது குடும்ப தலைவிகளுக்கு வழங்க இருக்கும் 1,000 ரூபாய் உதவித்தொகை ஜூன் 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதில் ஜூன் 3 ஆம் தேதி திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் ஆகும். ஆகவே அப்போது தமிழக முதல்வர் இந்த திட்டத்திற்கு கையெழுத்திடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.