Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் குறைந்த அளவில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!!

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் தமிழகத்தில் மிக குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். அதன் பிறகு கர்நாடகா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி பேர் 100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு மின்சார கட்டண உயர்வால் எவ்வித பிரச்சனையும் இருக்காது. அதன்பின் 100 யூனிட் முதல் 300 யூனிட் வரை 63,35,000 பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு 27 ரூபாய் 50 பைசா மட்டுமே கூடுதலாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்தும் 36,25,000 விவசாயிகளுக்கு 72 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் 18,82,000 பேருக்கு 147 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை கர்நாடக உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அவர்கள் 100 யூனிட் மின்சாரத்துக்கு 4 ரூபாய் 30 பைசா வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். குஜராத்தில் 5 ரூபாய் 25 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனையடுத்து வணிக நிறுவனங்களுக்கும் கூட குறைந்த அளவில்தான் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர்கள் மின்சார வாரியத்திற்கும், தமிழக அரசுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும். கடந்த ஆட்சியில் ஏற்பட்ட கடன் சுமையால் மின்சார வாரியத்தை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு 9,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதனால்தான் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் மின்சாரத்துறை தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது என்றார்.

Categories

Tech |