சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதற்கிடையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட், மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோவிற்கு ரூ.70 முதல் ரூ.95 வரை விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில், மக்கள் பசுமைப் பண்ணை கடைகளை நாடலாம் என்று கூறியுள்ளார்.