தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவின் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் இந்த சிறப்பை பெரும் முதல் மாநிலம் தமிழகம் தான். தமிழக போலீஸ் துறைக்கு கௌரவம் மிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தமிழக போலீசார் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது. காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.
அதனைத்தொடர்ந்து கடந்த ஓராண்டில் சாதி, மத கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள் இல்லை. ஆனால் காவல் நிலைய மரணங்களே இல்லை என சொல்லவில்லை, குறைந்து உள்ளது. காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலை ஏற்படுத்தி தரவேண்டும். சிறு தவறு செய்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும். அதாவது பாலியல் சட்டங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனையடுத்து குடியரசுத் தலைவரின் கொடியை வழங்கி சிறப்பித்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை வரவேற்கிறேன். இந்தியாவின் தலைநகரங்களுக்கு முன்மாதிரியானது நமது காவல்துறை. தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் இன்று பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகும். மேலும் அனைத்து காவலர்களுக்கும் கிடைத்துள்ள பெருமை இது என்று அவர் தெரிவித்துள்ளார்.