Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குழந்தைகளுக்கு காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா?…. அரசின் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உணவு வகைகளை அரசு முன்னதாகவே பட்டியலிட்டு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியானது 6 சமையல் கூடங்களில் தயாரிக்கப்படுகிறது.

தற்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அவர்கள் உணவு சரியான நேரத்தில் தயாரிக்கப்பட்டு முறையாக விநியோகப்படுகிறது என்பதை கண்காணிக்கும் வகையில் சி.எம்.13எப்.எஸ் என்ற செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலி மூலம் சமையல் தொடங்கும் நேரம், முடியும் நேரம், அங்கிருந்து வாகனத்தில் கொண்டு செல்லும் நேரம், பள்ளியில் விநியோகிக்கும் நேரம், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நேரம் போன்றவற்ற உன்னிப்பாக கவனிக்க முடியும். மேலும் எங்கு தாமதம் ஏற்படுகிறது என்பதை அறிய முடியும். குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |