Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடிய விரைவில் மின் கட்டணம் உயரும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினர் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக மின்சார துறையில் இருக்கும் கடன் காரணமாக மின் கட்டணம் உயர போவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இந்த மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகு மின்சார உயர்வு தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி தற்போது பொதுமக்களிடம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை, கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களை சேர்ந்த பொதுமக்கள் மின்சார உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஒரு தலைவர் உட்பட 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கிறார். அதாவது தொழில்நுட்ப உறுப்பினர் மற்றும் சட்டத்துறை உறுப்பினர் ஆகிய இருவருடன் ஆலோசனை செய்த பிறகு தலைவர் மின்சார உயர்வு தொடர்பாக முடிவு செய்வார். இதில் தற்போது தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே இருப்பதால், சட்டத்துறை உறுப்பினர் பதவிக்கான காலியிடம் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு மின்சார உயர்வு தொடர்பாக முடிவு செய்யப்படும். இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். மேலும் உறுப்பினர் நியமிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் கூடிய விரைவில் மின் கட்டணம் உயரும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |