தமிழகத்தில் கூட்டணி ஆட்சிகே என்ற பேச்சுக்கு இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வீரமாமுனிவரின் 340-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் பாண்டியராஜன் பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சிதக்குளம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கொரோனா காலம் என்பதால் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வேல்யாத்திரை விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வேல்யாத்திரை தொடர்பான வழக்கு வரும் பத்தாம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக உறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் கூறிய அவர் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.