தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார், இதனால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் – 103, செங்கல்பட்டு – 12, கள்ளக்குறிச்சி -3, நாமக்கல் – 2, காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ல் இருந்து 673ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,101ல் இருந்து 1,128ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை 93,138 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இன்று மட்டும் 6,850 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தற்போது 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.