நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வுகள் இன்று, நாளை மற்றும் 9,15,16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. யுபிஎஸ்சி தேர்வு எழுத செல்பவர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
Categories