Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்?…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

கொரோனா  கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்ய முதலமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளில் பல்வேறு தரவுகள் அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தற்போது திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் தடையை தளர்த்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் உட்பட இதர செலவுகளை அறிவிக்க மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 500 நபர்களும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 250 நபர்களும் பங்கேற்கலாம் என்ற தடையை நீக்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் முகக்கவசம் அணிவதற்கான தடை முழுமையாக நீக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |