Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியான கோவிஷில்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.

கொரோனா பரவாமல் இருப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தாலும், ஏதாவது ஒன்றின் மூலம் கொரோனா தொற்று பரவி வருகிறது. அது மட்டுமன்றி இந்தியா கண்டறிந்தால் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் போடப்பட்டு வருகிறது. கோவிஷில்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியான கோவிஷில்டு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்த சுகாதாரத்துறை, கையில் இருக்கும் இருப்பு பத்து நாட்களுக்கு வரும், அதற்குள் கூடுதல் தடுப்பூசி வந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |