Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்…. மத்திய அரசின் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிர படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆனது சமீப காலமாக சற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 19,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்று தமிழகம், டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த மாநிலங்களில் உள்ள சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் எனவும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிர படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 205.92 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரானா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதால் மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |