தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோணா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் சவாலாக உள்ளது. கொரோனோ பாதித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் முககவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை. கொரோனா அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவமனை செல்வது நல்லது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்..