தமிழக அரசின் உத்தரவை அடுத்து எம்பிபிஎஸ் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் 7 ஆயிரம் மாணவர்கள் தமிழகத்தில் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் எம்பிபிஎஸ் படிக்கும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் உரிய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு முடித்த மாணவர்களை கோவிட் பணிக்கு அமர்த்த அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அறிவித்துள்ளது. இதன்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு மாணவர்கள் வீடியோ கால் அல்லது தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளில் ஈடுபட்ட மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்கு தேவைப்படும் நோயாளிகளுக்கு தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க முடியும். மேலும் இந்த ஏழாயிரம் மாணவர்களும் நேரடியாக கொரோனா வார்டில் இருக்கும் நோயாளிகளை பராமரிக்க மாட்டார்கள் எனவும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.