Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா ரொம்ப குறைஞ்சிருச்சி… முதல்வர் பெருமிதம்…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து விட்டதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து நேற்று ரூ. 26 கோடியே 52 லட்சத்து 6 துறைகளை சேர்ந்த 14 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ. 36 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 7 துறைகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா, 21 ஆயிரத்து 509 பணியாளர்களுக்கு ரூ. 179 கோடி 34 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இவ்விழாவானது அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில், கொரோனா வைரஸ் பரவலை தமிழகத்தில்  கட்டுப்படுத்தியது  அரசு எடுத்த நடவடிக்கைகள், மற்றும் மருத்துவ குழு வல்லுநர்கள் கொடுத்த அறிவுரைகள் காரணம் என்று அவர் கூறினார்.தற்போது கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தமிழகத்தில் குறைந்து கொண்டுதான் வருகிறது. ஆனால் டெல்லி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்து தான் வருகிறது.

தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுத்த முடிவுகள் நல்ல பலனை தந்திருக்கின்றன. இருப்பினும் தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறிக் கொண்டிருக்கிறார்.என்ன நடக்கவில்லை என்றும் எங்களுக்கு புரியவில்லை, எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் முதலமைச்சர் கூறினார். சமீபத்தில் இந்தியா முழுவதும் இருக்கின்ற முதல் அமைச்சர்கள் பிரதமர் மோடி நடத்திய மாநாட்டில்  காணொளி மூலம்  கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுத்த முயற்சிகளில் தமிழ்நாடு அரசு வெற்றி பெற்று இருக்கிறது என பிரதமர் மோடி தமிழகத்தை பாராட்டியுள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.  கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் பாரதப் பிரதமரின் பாராட்டை பெற்றது நமது தமிழக அரசு தான் என்றும் முதலமைச்சர் நிருபர்களிடம் கூறினார். இதையடுத்து நிருபர்கள் முதலமைச்சரிடம் சில கேள்விகளை  கேட்டனர்.

அவற்றில் முதலாவதாக ஐ.ஐ.டி மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் என உயர் கல்வி நிறுவனங்களில் கொரோனா நோய் தொற்று அதிகம் பரவியுள்ளது.எனவே இவற்றை கட்டுப்படுத்த விரைவாக ஏதேனும் சிறப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுமா? என்று கேட்டனர்.கொரனோ நோய்த்தொற்று பரவியுள்ள நிறுவனங்கள் அரசு அறிவித்திருந்த விதிமுறைகளைப் பின்பற்றாததால்  தான் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு தான் வருகிறது. அங்கு இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதற்குரிய சிகிச்சைகளை வழங்கப்பட்டு தான் வருகிறது என்றும் அவர் கூறினார்.

இரண்டாவதாக அரசு அதிகாரிகள் பலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். இதைச் சுட்டிக்காட்டி அரசு எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழியே என்று கமலஹாசன் கூறியதை கேட்டனர்? அதற்கு பதில் கூறிய முதலமைச்சர் அரசுதான் லஞ்ச ஒழிப்பு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று கூறினார். தமிழக அரசு இதில் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். எங்கேயும் தவறுகள் நடக்கக் கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டு தான் வருகிறது.

கமலஹாசன் இப்பொழுது தான் புதிய கட்சி ஆரம்பித்து உள்ளார். அவருக்கு என்ன தெரியும்? அவருக்கு 70 வயதாகி சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி நடத்துபவர் அரசியல் செய்தால் என்னவாகும? அவர் நடத்தும் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பங்கள் கூட நன்றாக இருக்காது. இப்படிப்பட்ட ஒரு தலைவர் சொல்லக்கூடிய கருத்தை எப்படி அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக கூறி,நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் அவனுடைய வேலை. அந்நிகழ்ச்சியை பார்த்தால் நன்றாக இருக்கும் ஆனால் குடும்பம் கெட்டுவிடும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

இதைத் தொடர்ந்து எம்ஜிஆர் இருக்கும்பொழுது தனது பாடல்கள் மூலம் எவ்வளவு நல்ல கருத்துக்களை கூறி இருந்தார். ஆனால் கமலஹாசன் இதுவரை ஒரு படத்திலாவது நல்ல கருத்துக்களை நாட்டு மக்களுக்காக தெரிவித்துள்ளாரா ? நன்மை செய்யக்கூடிய ஒரு பாடலாவது பாடி  இருக்கிறாரா? ஆகையால் கமலஹாசன் சொல்லும் எந்தக் கருத்துக்களையும் எடுத்துக் கொள்ள அவசியம் இல்லை என்றும் கூறினார்.

 

Categories

Tech |