தமிழகத்தில் கடந்த 12 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு 135 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 12 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு 135 சதவீதம் அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மார்ச் 13 ஆம் தேதி 695 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மார்ச் 25 ஆம் தேதியில் 1779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளது.