Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சுனாமிக்கு இணையான கொரோனா 3-வது அலை…. அரசு பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய வகை ஒமிக்ரான்  வைரஸ் தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருவதால் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா 3-வது அலை தொடங்கி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சுனாமி அலைக்கு சமமாக உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது டெல்டா, ஒமைக்ரான் இணைந்த மூன்றாம் அலை. கொரோனா விதி முறைகளை கடைப்பிடிப்பது தான் பேரிடரிலிருந்து மீள ஒரே வழி என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இயக்கம் தொடங்கும் என்றும் இதில் 2-ம் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

Categories

Tech |