தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று இந்திய அறிவியல் கழகம் நடத்திய கூட்டு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஜனவரி இறுதியில் இருந்து 10 லட்சம் வரை பதிவாகும். மேலும் தமிழகத்தில் 80,000 என்ற அளவை தொடும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கவனமாக இருக்கவேண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.