தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு 100- ஐ தாண்டியதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் 30 என்ற அளவில் பதிவான கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல நேற்று ஒரே நாளில் 139 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை 59, செங்கல்பட்டு 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் நேற்று 52 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் அரசு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து போல தமிழகத்தில் கொரோனா 4 ஆம் அலை தொடங்கி உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர் பொதுமக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் முக கவசம் அணிவது உள்ளிட்ட நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.