தமிழகத்தில் கொரோனா தொற்றிற்கு இன்று ஒரே நாளில் மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தின் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.கேளிக்கை விடுதிகள்,பூங்காக்கள் தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்களும் திறக்கப்பட்டு விட்டன .இந்நிலையில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது .தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவின் காரணமாக 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,984 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக சென்னையில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.சென்னையில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1369 ஆகும். சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4078 ஆகும். ஊரடங்கு தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து வருவது பொதுமக்கள் நெஞ்சில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.