தமிழக அரசு மாணவர்களுடைய கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக மாணவர்களுடைய அறிவை வளர்க்க கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறப்பானவர்களாகவும், தரமான கல்வி அறிவை பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் வரை அனைவருக்கும் தகுதி தேர்வு பிரிவு வாரியாக நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ ஆசிரியர்கள் நியமனம் குறித்த கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ ஆசிரியர்களுக்கு தனியாக சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி கேட்கப்படுகிறது. ஆனால் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வுகள் மட்டுமே எழுத வேண்டும். கௌரவ ஆசிரியர்களுக்கு தனியாக சிறப்பு தேர்வு நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.