Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்….! ”அவுங்க யாருமே வேண்டாம்”… தேர்தல் ஆணையம் உத்தரவு …!!

6 மாதத்தில் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களை சட்டமன்ற தேர்தல் பணிக்கு பயன்படுத்தக்க்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையமானது தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஐந்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு மிக முக்கியமான கடிதத்தினை எழுதி இருக்கின்றார்கள். அதில் இந்த ஐந்து மாநில தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் ? தேர்தல் நடத்துவதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கபட்டு விட்டதா ? என்பதை தற்போது தெரிவித்திருக்கின்றார்கள்.

மிக முக்கியமான விஷயம்,  தேர்தல் நடைபெறுகிறது என்றால், தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்க  டிரான்ஸ்பர் என்று சொல்லக் கூடிய பணி இட மாற்றம் செய்யப்படும். அதிலும் சில முக்கியமான விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அவர்களது சொந்த ஊர்களில், சொந்த மாவட்டங்களில் நியமிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு முந்தைய தேர்தல்களில் ஏதேனும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அல்லது இது தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தால் அத்தகைய அதிகாரிகள் யாரையும் தேர்தல் சம்பந்தமான பணிகளுக்கு நியமிக்க வேண்டாம் என்ற ஒரு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு அதிகாரி ஓய்வு பெற இருக்கிறார் என்றால் அந்த அதிகாரியையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சில மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்ன மாதிரியான அறிவுரைகள் வழங்கப்பட்டதோ அதே போல நடைமுறைகளுடன் கூடிய சுற்றறிக்கை தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முழுமூச்சாக இறங்கி விட்டார்கள். தேர்தல் சம்பந்தமான முதல் செய்தி குறிப்பு, அறிவுறுத்தலை வழங்கி இருக்கின்றார்கள்.  என்பதை இந்த புதிய அறிவுறுத்தலில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியதாகிறது.

Categories

Tech |