தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வசித்து வரும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த ராஜஸ்தானில் சார்ந்த தலில் சந்த், மனைவி புஷ்பா, மகன் ஷீத்தல் ஆகிய 3 பேரும் சொத்து தகராறு காரணமாக நேற்று மாலை துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்கு 5 தனிப்படை காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது பற்றி மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தலைநகர் சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உன் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கை போரின் காட்டும் ஆர்வத்தை மக்களை காப்பாற்றுவதில் காட்ட வேண்டும். பலி போடுகின்ற அரசியலை நிறுத்திவிட்டு ஆயுத கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.