அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும். ஆவண பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும். திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் விடுமுறை நாளான சனிக்கிழமை முதற்கட்டமாக 100 பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும். வரவேற்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளார்.