தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசும் போது, நாட்டிலேயே முதல்முறையாக சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கபட்டுள்ளது. சிடி ஸ்கேன், மொபைல் எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் அடங்கிய மருத்துவமனை உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் அரசு கூறிய ஆலோசனை என்ன ?
அனைத்து குடும்பங்களுக்கும் முககவசம் வழங்க வேண்டும் என மு க ஸ்டாலின் யோசனை கூறினார். தமிழகத்தில் இதுவரை 46 லட்சம் மக்களுக்கு முகக்கவசம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன.தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா சமூக பரவல் நிலையில்லை. வீடு வீடாக சென்று காய்ச்சல்,வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம். கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.