தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பொது துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு 2.38 கோடி வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
அவ்வாறு இருக்கும் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வேண்டி பதிவு செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படுகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் சிலிண்டர் டெலிவரி செய்யப்படுவதில்லை. நேற்று கிருஷ்ண ஜெயந்தி இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகள் வர உள்ளன.அதனால் சிலிண்டர் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் பண்டிகை நாட்களில் சிலிண்டர் டெலிவரையும் செய்வதில்லை. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் சிலிண்டர் டெலிவரி செய்ய வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.