தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்து இருப்பதாக இன்று வெளியான கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்து இருப்பதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
அதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (திமுக+காங்கிரஸ்+பிறர்) வாக்கு சதவீதம் வரும் தேர்தலில் 1.7% அதிகரித்து 41.1% ஆக இருக்கும் என்றும், அதிமுக+பாஜக+ பிற கூட்டணி வாக்குகள் 15 சதவீதம் குறைந்து 28.7% ஆக இருக்கும் என்றும், அமமுகவுக்கு 7.8 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கமலின் மக்கள் நீதி மைய கட்சிக்குப் பெரிய அளவில் வாக்குகள் கிடைக்காது என்றும் இன்று வெளியான கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.