வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் பாதிக்கப்படுவதுடன் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
நேற்று பிற்பகல் கோவில்பட்டி தீப்பெட்டி ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு, உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.