தீபாவளி பண்டிகையையொட்டி அக். 21ஆம் தேதி முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்களில் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 160ல் இருந்து 190ஆகவும், சாதாரண தியேட்டர்களில் 130ல் இருந்து 190ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 360 கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. தீபாவளியை முன்னிட்டு நாளை சர்தார், ப்ரின்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.