Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு?…. புதிய அதிரடி….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் முழு ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வருமோ என்ற பயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளான இரவு ஊரடங்கு மற்றும் வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு ஆகியவை அமலில் இருக்கிறது. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை காரணமாக பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பாக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அதாவது மாணவர்களின் நேரடி கற்றல் முறை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிப்பதன் அடிப்படையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் 50 % மாணவர்களுடன் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்கள் சார்பில், மாநில தலைவர் ஆறுமுகம் தலைமையில் கலெக்டர் அனிஷ்சேகரிடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும் இந்த விடுமுறை காரணமாக குழந்தை தொழிலாளர்களாகவும், குழந்தை திருமணத்தாலும் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 80 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி 65 சதவீதம் பேருக்கும்  செலுத்தப்பட்டுள்ளது.. இதன் காரணமாக 3-ம் அலை தாக்கம் பெரிதும் மாணவர்களை தாக்க வாய்ப்பில்லை. ஆகவே பள்ளிகளை திறக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |