தமிழகத்தில் காலியாக உள்ள இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இதனை வெளியிட்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மூன்று சட்டமன்ற தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. திருவெற்றியூர், குடியாத்தம் மற்றும் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி விட்டது என்ற அறிவிப்பு வெளியாகி 6 மாத காலத்திற்குள்ளாக தேர்தல் ஆணைய விதிப்படி இடைத் தேர்தலை நடத்த வேண்டும்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த சட்டமன்ற தொகுதியில் தேர்தலை நடத்த வாய்ப்பு இல்லை என்ற ஒரு விஷயத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 7-ஆம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது. அதன் பிறகு அன்றைய சூழலை பொறுத்து முடிவினை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் என்ற அறிவிப்பினை தற்போது இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அது மக்கள் நலன் கருதி இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ காரணமாக இந்த முடிவினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். திருவெற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்ட தேதி பிப்ரவரி 27 மற்றும் 28. இந்த இரண்டு தொகுதி காலியானதன் அதனடிப்படையில் ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு தினங்களுக்குள் இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் தற்போது அந்த சூழல் இல்லாத காரணத்தால் இந்த இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்ற அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.