தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செப்டம்பர் 1ம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கட்டணம் வசூலிப்பு முறையையும் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கட்டண உயர்வு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.