மத்திய அரசின் நிபந்தனையால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு சொத்து வரியை உயர்த்தியது. இதனால் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அமைச்சர் கே என் நேரு இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் மத்திய அரசு விதித்த நிபந்தனை காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. வரியை உயர்த்த விட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்தது. தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. தற்போதுதான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.