தமிழகத்தில் சொத்துவரி 25 சதவிகிதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள நிர்பந்தம் காரணமாகவே இந்த வரி உயர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி உயர்வை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருச்சி மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டு வருகிறது.
Categories