Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சொத்து விவரம் அறிய இனி…. வருவாய்த்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வீடு,மனை வாங்குவோர் அது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை அறிய ஆன்லைனில் புதிய வசதியை வருவாய்த்துறை தற்போது உருவாக்கியுள்ளது. பொதுவாக வீடு மற்றும் மனை வாங்குவோர் அது தொடர்பான பத்திரங்களையும் வில்லங்கச் சான்றிதழ்களையும் சரி பார்ப்பது வழக்கம். கட்டட அனுமதி வழங்கும் அரசுத்துறைகள் மற்றும் கடன் வழங்கும் வங்கிகள் போன்றவை சொத்து தொடர்பான உண்மை தன்மையே வழக்கறிஞர் மூலமாக ஆய்வு செய்கின்றன. இருந்தாலும் பல இடங்களில் வழக்கு விவரங்களை மறைத்து சொத்துக்கள் விற்கப்படுகிறது.

இதனால் சொத்து வாங்குவோர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியாளர் சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகப்பட்டு வருகிறது. அதனைப் போலவே நீதி துறையும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. உரிமையியல் வழக்குகள் நிலுவை விவரங்களை சொத்து வாங்குவோர் ஆன்லைன் முறையில் எளிதில் தெரிந்து கொள்ள புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது வருவாய்த்துறை இணையதளம் மூலமாக இ கோர்ட் தகவல் தொகுப்பை மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |