Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும்…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் 2021 ஜனவரி 1-ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் தற்போது வரை மதுக் கடைகள் திறக்கப்படவில்லை.

அதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காததால் எப்போது மது கடைகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவ காரணமாக மூடப்பட்ட பார்கள், அடுத்த மாத ஊரடங்கு தளர்விலாவது திறக்க பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |