தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்களின் விடுமுறையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைவதால் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, நெல்லை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து சென்னை திரும்ப ஏதுவாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.