தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜனவரி இரண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.
இதனை அடுத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜனவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி நடவடிக்கையை எதிர்கொள்ள மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தயாராக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளது.