Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு மீண்டும்?…. அமைச்சர் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. அதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்தது. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் கல்வியானது சிரமமாக இருந்தது. அவர்களால் இணைய வசதி மற்றும் ஸ்மார்ட் போன்களை வாங்கி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆகவே இவர்களின் நிலையை உணர்ந்து கடந்த திமுக ஆட்சியில் கல்வி தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து தினமும் அந்தந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் கால அட்டவணை படி பாடங்களை நடத்தி வந்தனர்.

இதன் மூலமாக பெரும்பாலான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி முதலில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிற வகுப்பு மாணவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று கருத்துகள் எழுந்த நிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. எனினும் கொரோனா தொற்றால் மாணவர்கள் மனதளவில் பாதிப்படைய கூடாது என்பதற்கான ஜனவரி 31ம் தேதி வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 31ஆம் தேதிக்கு பின் நோய் பரவல் சூழலை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தொடர்பாக முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு என்பது மிக மிக முக்கியமான தேர்வு ஆகும். அதை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் கண்டிப்பதை மாணவ-மாணவிகள் தவறாக நினைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |